உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிக்க பணம் இல்லாததால் பெயிண்டர் தற்கொலை

குடிக்க பணம் இல்லாததால் பெயிண்டர் தற்கொலை

காரைக்கால்: காரைக்காலில் மது அருந்த பணம் இல்லை என்ற வேதனையில் தீக்குளித்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.காரைக்கால், கோட்டுச்சேரி, முத்துசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்; பெயிண்டர். இவரது மனைவி அஞ்சம்மாள். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ராஜ்குமார் அதிகமாக மது அருந்துவது வழக்கம். இதனால் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது.போதையில் இருந்து மீட்க ராஜ்குமாரை விடியல் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். மீண்டும் ராஜ்குமார் போதைக்கு அடிமையானார். கடந்த 30ம் தேதி மது அருந்துவதற்கு மனைவி பணம் தராததால், வேதனையில் பெயிண்ட் அடிக்கும் தின்னரை குடித்துவிட்டு, உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுக்குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை