உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்டாலினுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை சிதம்பரத்தில் பழனிசாமி பேச்சு

ஸ்டாலினுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை சிதம்பரத்தில் பழனிசாமி பேச்சு

சிதம்பரம் : 'ஸ்டாலினுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை' என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து, சிதம்பரத்தில் நேற்று மாலை நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சி பொற்கால ஆட்சி, தற்போது நடக்கும் தி.மு.க., ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பொம்மை முதல்வராக உள்ளார். அவருக்கு நாட்டு மக்களைப் பற்றி கவலை இல்லை. தன் வீட்டு மக்களைப் பற்றி தான் கவலை. எதிரிகளை விரட்டி அடித்து நாம் வெற்றி பெற வேண்டும்.கடந்த 2006 -11ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த தி.மு.க., ஆட்சி இருண்ட ஆட்சி. ஆனால், 2011ம் ஆண்டு ஜெ., முதல்வராக பொறுப்பேற்று, 3 ஆண்டுகளில் மின்பற்றாக்குறையை சரி செய்து, தடையில்லா மின்சாரம் வழங்கினார். அ.தி.மு.க., ஆட்சியில் தான் இந்தியாவில் நீண்ட தார் சாலை அமைத்தோம்.பா.ஜ.,வைப் பார்த்து எங்களுக்கு பயம் இல்லை. மக்கள் விரோத திட்டங்களை பா.ஜ., அரசு கொண்டு வந்தால் அதனை கடுமையாக எதிர்ப்போம்.ஆனால், தி.மு.க.,வினர் எதிர்க்கட்சியாக இருக்கும்போது 'கோ பேக் மோடி' என பலுான் விடுவார்கள். அதே நேரத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும்போது 'வெல்கம் மோடி'என்று சிவப்பு கம்பளம் விரித்து இரட்டை வேடம் போடுவர்.அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளவரை என்.எல்.சி., விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்க விடவில்லை. விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருப்பது அ.தி.மு.க., தான். அதனால்தான் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அ.தி.மு.க., அரசு அறிவித்ததுசேத்தியாத்தோப்பு கரும்பு ஆலை அ.தி.மு.க., ஆட்சியில் லாபத்தில் இயங்கி வந்தது. தற்போது கரும்புகளை தனியார் ஆலைக்கு தாரைவார்க்கும் நிலை உள்ளது.நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய், கரும்புக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் தருவதாக பொய் வாக்குறுதி கொடுத்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. ஆனால், இதுவரை விவசாயிகளுக்கு சொன்னதை செய்யவில்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் காட்டுமன்னார்கோவிலில் இளையபெருமாளுக்கு மணிமண்டபம் கட்டப்படும். சிதம்பரம் தொகுதியில் வேட்பாளர் சந்திரஹாசனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச்செய்யுங்கள்.இவ்வாறு பழனிசாமி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை