உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தன்னந்தனியாக சமாளிக்கும் போக்குவரத்து போலீசார் பி.ஏ.பி., - ஐ.ஆர்.பி.என்., போலீசார் எஸ்கேப் கிறுகிறுக்க வைக்கும் நெரிசல்

தன்னந்தனியாக சமாளிக்கும் போக்குவரத்து போலீசார் பி.ஏ.பி., - ஐ.ஆர்.பி.என்., போலீசார் எஸ்கேப் கிறுகிறுக்க வைக்கும் நெரிசல்

புதுச்சேரியில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இத்துடன், வார இறுதி நாட்களில் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களும் சேர்ந்து கொள்வதால், நகர வீதிகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.கிழக்கு மற்றும் வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் போதிய எண்ணிக்கையிலான போலீசார் இல்லை.50க்கும் மேற்பட்ட போலீசார் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசலை சீரமைக்க முடியாமல், போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் திணறி வருகிறது.குறிப்பாக, ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிக்கு ஆயுதப்படையில் 'ஓய்வாக' இருக்கும் போலீசாரை அனுப்பி வைக்குமாறு போக்குவரத்து போலீசார் கோரிக்கை விடுக்கின்றனர்.ஆயுதப்படைக்கும், போக்குவரத்து பிரிவு உயர் அதிகாரிகளுக்கும் ஏற்கனவே 'லடாய்' நிலவி வருகிறது. இதனால், வி.ஐ.பி., பாதுகாப்பு, சிறை பாதுகாப்பு என ஏதேனும் கார ணங்களை கூறி ஆயுதப்படையில் இருந்து போலீசாரை அனுப்புவது கிடையாது.இதுபோல, ஐ.ஆர்.பி.என்., போலீசாரையும் போக்குவரத்து பணிக்கு அனுப்புவது கிடையாது. கூடுதல் போலீசாரை கொடுங்கள் என கேட்டு கேட்டு ஓய்ந்து போன போக்குவரத்து போலீசார், நகர பகுதியில் நிலவும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை