உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அதிவேக வாகனங்களுக்கு அபராதம் பெரியக்கடை போலீஸ் திடீர் சோதனை

அதிவேக வாகனங்களுக்கு அபராதம் பெரியக்கடை போலீஸ் திடீர் சோதனை

புதுச்சேரி: எஸ்.வி.பட்டேல் சாலையில் அதிவேகமாக வந்த வாகனங்களை மடக்கி பிடித்து போலீஸ் அபராதம் விதித்தனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள டிராபிக் போலீசார் கொண்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதுதவிர, பைக் திருட்டுகளும் அதிக அளவில் நடந்து வருகிறது. போக்குவரத்து போலீசாருடன் சட்டம் ஒழுங்கு போலீசாரும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுப்படும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வந்தனர். இதற்காக இ-சலான் இயந்திரமும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் வழங்கப்பட்டது. சமீப காலமாக சட்டம் ஒழுங்கு போலீசார் இ-சலான் மூலம் அபராதம் வசூலிப்பதை நிறுத்தி வைத்திருந்தனர். போக்குவரத்து விதிமீறலில் ஈடுப்படும் வாகன ஓட்டிகளுக்கு, சட்டம் ஒழுங்கு போலீசார் அபராதம் விதிக்க சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், கடற்கரை ஒட்டியுள்ள செயின்ட் லுாயிஸ் வீதியில் அதிவேகமாக வாகனம் ஓட்டி வருவதாக, அரசு உயர் அதிகாரிகளிடம் இருந்து போலீசுக்கு புகார் சென்றது.இதைத் தொடர்ந்து, பெரியக்கடை போலீசார் எஸ்.வி.பட்டேல் சாலை, செயின்ட் லுாயிஸ் வீதி சந்திப்பில் திடீர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை