உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓய்வூதியர்கள் வாயிற்கூட்டம்

ஓய்வூதியர்கள் வாயிற்கூட்டம்

புதுச்சேரி: கருவடிக்குப்பம், பாத்திமா மேல்நிலைப் பள்ளி எதிரில், ஓய்வூதியர்கள் வாயிற்கூட்டம் நடந்தது.பாத்திமா பள்ளி ஓய்வூதியதாரர்கள் சங்க செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். புதுச்சேரி பென்ஷன்தாரர் சங்க பொறுப்பாளர்கள் சீதாலட்சுமி மற்றும் அந்தோணிசாமி வாழ்த்துரை வழங்கினர்.சங்க செயலாளர் ஸ்டாலின் கூறுகையில், 'அரசு உதவி பெறும் மற்ற பள்ளிகள் அனைத்தும் தங்களது நிர்வாக பங்கை செலுத்தி விட்டன. ஆனால், பாத்திமா பள்ளி நிர்வாகம் தன்னுடைய 5 சதவீத நிர்வாக பங்கை செலுத்த மறுத்து வரும் காரணத்தால், கடந்த 10 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.பாத்திமா பள்ளி நிர்வாகம், 5 சதவீத பங்கை கட்ட தவறும் பட்சத்தில், வரும் 4ம் தேதி காலை 10:00 மணிக்கு பள்ளியின் பொதுமேலாளர் அலுவலகம், பேராயர் இல்லம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ