மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
20 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
20 hour(s) ago
புதுச்சேரி: இட ஒதுக்கீட்டிற்கு எதிராகச் செயல்பட்ட சார்புச் செயலர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் அறிக்கை:புதுச்சேரியில் கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 சதவீதம், மீனவர்- 2 சதவீதம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் 2 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் 0.5 சதவீதம் என இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டு அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்- 'பி' பதவிகளான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என மொத்தம் 529 பதவிகள் நிரப்ப கல்வித்துறை அறிவிப்பாணை வெளியிட்டது.அப்போது பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் சார்புச் செயலர் 529 ஆசிரியர் பதவிகளுக்கு மேற்சொன்ன வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என, அறிவிப்பாணை வெளியிட்டார். இதேபோல், தற்போது பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் சார்புச் செயலர் 183 பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என அறிவிப்பாணை வெளியிட்டார்.இந்த இரு அதிகாரிகளும் 70 சதவீத மக்களின் சட்ட உரிமையான இடஒதுக்கீட்டைப் பறித்துச் சமூக நீதியைக் குழித் தோண்டிப் புதைத்துள்ளனர். எனவே, அரசு சார்புச் செயலர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
20 hour(s) ago
20 hour(s) ago