மேலும் செய்திகள்
செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநர் பணி நிறைவு
57 minutes ago
விளம்பரச் செய்தி: விஜயா மெடிக்கல்ஸ் திறப்பு விழா
1 hour(s) ago
சாரல்
3 hour(s) ago
சலுான் கடைக்காரர் மீது தாக்குதல்
5 hour(s) ago
புதுச்சேரி: பெரியார் நகரில் வாலிபர் வெட்டி கொலை செய்த வழக்கில் மேலும் மூவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பெரியார் நகர் 10வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ருத்ரேஷ், 27; பெயிண்டர். இவர் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர் தரப்பிற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11:30 மணிக்கு, பெரியார் நகர், கங்கைமுத்து மாரியம்மன் கோவில் முன்பு நின்றிருந்த ருத்ரேஷ்சை 6 பேர் கொண்ட கும்பல் சராமாரி வெட்டி கொலை செய்தது. அங்கிருந்து தப்பிச் சென்ற கும்பலில் கவுதம், 24; ஈஸ்வர், 20; ஆனந்த், 23; ஆகிய மூவரை வில்லியனுார் போலீசார் கைது செய்து உருளையன்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கொலைக்கு பயன்படுத்திய 2 கத்திகள், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த எழில், பரத், சதிஷ் ஆகிய மூவரை உருளையன்பேட்டை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
57 minutes ago
1 hour(s) ago
3 hour(s) ago
5 hour(s) ago