| ADDED : மே 30, 2024 04:32 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க கோரி, மா.கம்யூ., மாநில செயலாளர் ராஜாங்கம், முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்துள்ளார்.மனுவில், புதுச்சேரி, காமாட்சி அம்மன் கோவில் தெரு, வேதபுரீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடம் அபகரிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி, அரசு உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி கோவில்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் மின்னணு முறையில் ஆவணப்படுத்தி, பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றப்படும் என, சட்டசபையில், அறிவிக்கப்பட்டது. இது அறிவிப்பாகவே உள்ளது.புதுச்சேரி அரசு உடனடியாக கோவில் சொத்துக்கள், பொது சொத்துக்களின் விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும். கோவில் சொத்தை அபகரிக்க முயல்பவர்கள், உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.