மேலும் செய்திகள்
இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி
23-Dec-2025
கண்டன ஆர்பாட்டம்
23-Dec-2025
சி.சி.டி.வி., கேமரா பொருத்தம்
23-Dec-2025 | 1
508 மாடுகளுக்கு சிகிச்சை
23-Dec-2025
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
23-Dec-2025
புதுச்சேரி: மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உடல் பரிசோதனை தேர்வு நாளை நடக்கிறது.புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:2024-25 ம் கல்வியாண்டிற்கான நீட் சார்ந்த இளநிலை மருத்துவ படிப்புகளில் மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்கள் அவர்களது ஊனத்தின் சதவீதத்தை கண்டறிவதற்கான மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவ உள்ளிருப்பு அதிகாரி முன்பு மாணவர்கள், ஆஜராக வேண்டும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துமவனைகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை தேர்வு நாளை 6ம் தேதி முதல் 8 ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடக்கிறது. புதுச்சேரி மாணவர்களுக்கு இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையிலும், காரைக்கால் மாணவர்களுக்கு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும், மாகி மாணவர்களுக்கு மாகி பொது மருத்துமவனையிலும், ஏனாம் மாணவர்களுக்கு ஏனாம் பொது மருத்துவமனையிலும் மருத்துவ பரிசோதனை நடைபெறும்.இதில் பங்கேற்க வரும் விண்ணப்பதாரர்கள் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டையின் நகல், விண்ணப்ப படிவத்தின் நகல், முந்தைய மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
23-Dec-2025
23-Dec-2025
23-Dec-2025 | 1
23-Dec-2025
23-Dec-2025