| ADDED : ஜூன் 26, 2024 07:39 AM
வில்லியனுார் : அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. கல்லுாரி முதன்மை இயக்க அதிகாரி வித்யா தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் பிரதீப் தேவநேயன் சிறப்பு விருந்தினரை வரவேற்றார். வேலைவாயப்பு முகாமில் சென்னையை சேர்ந்த விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியை சேர்ந்த பல்வேறு துறை இறுதியாண்டு மாணவர்கள் கலந்துகொண்டனர்.சிறப்பு விருந்தினராக விப்ரோ நிறுவன சென்னை மண்டல தலைவர் ஆனந்த கிருஷ்ணன் தேவராஜ் பங்கேற்று வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கி, பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் கல்லுாரியின் டீன் ஜெயராமன் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கல்லுாரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அதிகாரி ஆனந்தராஜ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். துணை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அதிகாரி சாந்து லுாயிஸ் நன்றி கூறினார்.