உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் பி.பி.எல்., போட்டிக்கான வீரர்கள் ஏலம்

துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் பி.பி.எல்., போட்டிக்கான வீரர்கள் ஏலம்

வில்லியனுார் : துத்திப்பட்டு சி.ஏ.பி., கிரிக்கெட் மைதானத்தில் பி.பி.எல்., போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது.புதுச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்) போட்டிகள் வரும் ஜூன் மாதம் துத்திப்பட்டு சி.ஏ.பி., மைதானத்தில் நடக்கிறது. போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டி.வி., நேரடி ஒளிபரப்பு செய்கிறது.பி.பி.எல்., அணிகளான வில்லியனுார் மோஹித் கிங்ஸ், ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ், மாகே மெகாலேஸ், காரைக்கால் நைட் ரைடர்ஸ், ஒயிட்டவுன் டராப்தாட் ஜெயின்ட்ஸ், ஏனாம் ராயல்ஸ் ஆகிய ஆறு அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.ஒவ்வொரு அணியும் தலா 10 வீரர்களை ஏலம் கேட்டனர். மாகே அணி வீரர் பரத் பூஷன் அதிகபட்சமாக ரூ.29.50 லட்சம், ஒயிட் டவுன் அணி ஆனந்தசிங் பட்டயா ரூ. 24.50 லட்சமும் மற்ற வீரர்கள் ரூ.15 லட்சத்திற்குள் ஏலம் எடுக்கப்பட்டனர்.நாளை துவங்கி மார்ச் 6ம் தேதி வரை, ஷார்க்ஸ், லயன்ஸ், புல்ஸ், டைகர்ஸ், பாந்தர்ஸ், டஸ்கர்ஸ் என்ற பெயரில் ஆறு அணிகள் கொண்ட டி 20 கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளது. இதில், பி.பி.எல்., ஏலத்தில் எடுத்த 16 வீரர்களில் 7 வீரர்கள் மற்றும் ஏலத்தில் எடுக்கப்படாத 10 வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் விளையாட உள்ளனர்.ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள், அணிகளுக்கு சி.பி.ஏ., தலைவர் தாமோதரன் வாழ்த்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், 'புதுச்சேரியில் 19 வயதுக்கு உட்பட்ட சர்வதேச போட்டிகள் நடத்தி உள்ளோம். சீனியர் சர்வதேச போட்டிகள் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் இரு நிபந்தனைகள் விதித்துள்ளது. அதில் விமான நிலையம், நட்சத்திர ஓட்டல்கள் மைதானங்களின் அருகில் இருக்க வேண்டும்.புதுச்சேரியில் விமான நிலையம் உள்ளது. நட்சத்திர ஓட்டல்கள் இல்லாததால் சீனியர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியவில்லை. விரைவில் சர்வதேச போட்டிகளை நடத்த சி.ஏ.பி., ஆர்வத்தோடு உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை