மேலும் செய்திகள்
நேர்முக திறன் வேலைவாய்ப்பு பயிற்சி
7 hour(s) ago
பெண்ணின் படத்தை மார்பிங் செய்து மிரட்டல்
7 hour(s) ago
கணவர் மாயம் மனைவி புகார்
7 hour(s) ago
அலையன்ஸ் பிரான்சிஸ் நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி
7 hour(s) ago
புதுச்சேரி: கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி 21 வது ஆண்டு விழாவையொட்டி, துத்திப்பட்டில் நடந்த நிகழ்ச்சியில், கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.புதுச்சேரி அடுத்த துத்திப்பட்டில் கேப் -சீகெம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி தலைவர் தாமோதரன், சீகெம் நிறுவனத்தின் நிறுவனர் பத்மா முன்னிலை வகித்தனர்.அசோசியேஷன் கவுரவ செயலாளர் ராமதாஸ், முன்னாள் செயலாளர் சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கிரிக்கெட் வீரர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிரிக்கெட் அஸோசியேஷன் தலைவர் தாமோதரன் ஆண்டு அறிக்கை வெளியிட்டு பேசுகையில், 'புதுச்சேரி கிரிக்கெட் வளர்ச்சிக்கான சிறப்பான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது' என்றார். தொடர்ந்து, கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும், சிறப்பாக பணியாற்றிய நடுவர்கள், ஸ்கோரர், வீடியோ அனலிஸ்ட், டிரைனர், அணி மேலாளர்கள் மற்றும் சிறந்த பணியாளர்களுக்கும் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். துணைத் தலைவர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago