உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒட்டக சவாரிக்கு போலீசார் தடை

ஒட்டக சவாரிக்கு போலீசார் தடை

புதுச்சேரி: பாண்டி மெரினா கடற்கரையில் ஓட்டகம் சவாரிக்கு, போலீசார் தடை விதித்துள்ளனர். புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரையில் சிறுவர்கள், சுற்றுலா பயணிகள் சவாரி செய்யும் வகையில் 3 ஒட்டகம், ஒரு குதிரை உள்ளன. இதில் ஒட்டக சவாரிக்கான உரிமம் கடந்த ஏப்ரல் மாதம் வரை பெறப்பட்டிருந்தது. பின்னர் உரிமம் நீட்டிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதற்கிடையே, 13 வயது உடைய ஒட்டகம் கடந்த சில தினங்களுக்கு முன் இறந்தது.இந்நிலையில், பாண்டி மெரினாவில் ஒட்டக சவாரிக்கு உரிமம் புதுப்பிக்காதது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் புதுச்சேரி நகராட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.மேலும், ஒட்டக சவாரிக்கான உரிமம் புதுப்பிக்கும் வரை சவாரிக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி