உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

போலீஸ் டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வில்லியனுார் : வில்லியனுார் அருகே சாலை விபத்தில் படுகாமடைந்த போலீஸ் டிரைவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார்.புதுச்சேரி கருவடிக்குப்பம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த வீரமுத்து மகன் முருகன்(36). இவர் புதுச்சேரி போலீஸ்துறையில் எம்டிஓ பிரிவில் டிரைவராக பணியாற்றினார். தற்போது வில்லியனுார் அருகே உள்ள பத்துக்கண்ணு சப்தகிரி கார்டனில் வீடு கட்டி குடியேறினார்.இந்நிலையில் சப்தகிரி கார்டனில் இருந்து வில்லியனுாருக்கு தனது பைக்கிள் சென்றார். பத்துக்கண்ணு நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில், தலையில் பலத்தகாமடைந்து மயங்கிய முருகனை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், நேற்று முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். அவருக்கு சற்குணம் என்ற மனைவியும், கோஷன்ராஜ், அனித்ராஜ் என இரு பிள்ளைகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ