மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
பாகூர்: கன்னியக்கோவிலில் சாலையோரம் டைலர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் அடுத்த நடுவீரப்பட்டு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்ரமணியன், 32; டைலர். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.சுப்ரமணியன் காட்டுக் குப்பத்தில் உள்ள தனியார் பை தயாரிக்கும் கம்பெனி யில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால், சரியாக வேலைக்கு செல்வதில்லை.நேற்று முன்தினம் கன்னியகோவில் மெயின்ரோட்டில் சுப்ரமணியன் இறந்து கிடந்தார். கிருமாம்பாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, சுப்ர மணியன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago