உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை

புதுச்சேரி தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை

புதுச்சேரி: புதுச்சேரி தங்கும் விடுதிகளில் தமிழக ரவுடிகள் பதுங்கி உள்ளனரா என ஒதியஞ்சாலை போலீசார் நேற்றிரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து பிற மாநிலங்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதற்கிடையே, புதுச்சேரியில் தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவின் பேரில் புதுச்சேரியில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதி தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.இதன் ஒருபகுதியாக ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்றிரவு அப்பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாரும் தங்கி இருக்கிறார்களா என சோதனை செய்தனர்.மேலும், தங்கும் விடுதிக்கு வருபவர்கள் விவரங்களை நிச்சயம் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். தங்க வருபவர்களிடம் ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகலை கேட்டு பெற்றிருக்க வேண்டும் என ஓட்டல் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினர்.சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாரேனும் வந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதேபோல், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தமிழக ரவுடிகள் குறித்து சோதனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை