உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காப்பீட்டு திட்டம் கொண்டுவர வேண்டும் மின் துறை ஐ.டி.ஐ., நல சங்கம் கோரிக்கை

காப்பீட்டு திட்டம் கொண்டுவர வேண்டும் மின் துறை ஐ.டி.ஐ., நல சங்கம் கோரிக்கை

புதுச்சேரி: மின் துறை ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசுக்கு புதுச்சேரி மின் துறை ஐ.டி.ஐ., நல சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து சங்க பொது செயலாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மின் துறையில் 750க்கும் மேற்பட்ட தொழிலாளர்,பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இதுபோன்ற சூழ்நிலையில், கூடுதல் பணி சுமை காரணமாக மின் துறை ஊழியர்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளும்போது கவனம் சிதறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.கடந்த ஒரு வாரத்தில் முத்திரையர்பாளையம் மின் துறை ஊழியர்கள் சுப்புராயம்,சந்திரன் ஆகியோர் மின் விபத்தில் சிக்கினர்.ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மற்றொருவர் சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது போன்று பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு ,அரசு மற்றும் மின்துறையில் எந்த பொருளாதார ரீதியாக உதவிகளும் கிடைப்பதில்லை. .எனவே தொழிலாளர்களுக்கான அரசு சார்பில் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வர வேண்டும். மின் துறையில் கட்டுமான உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த காலிபணியிடங்களில் ஐ.டி.ஐ.,முடித்து வேலைக்கு காத்திருக்கும் மாணவர்களை கொண்டு நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்