உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நமச்சிவாயத்தை ஆதரித்து பா.ஜ., பிரமுகர் பிரபாதேவி ஓட்டு சேகரிப்பு

நமச்சிவாயத்தை ஆதரித்து பா.ஜ., பிரமுகர் பிரபாதேவி ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி : பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து உழவர்கரை தொகுதியில் அக்கட்சி பிரமுகர் பிரபாதேவி வீரராகு வீடு வீடாக தீவிரமாக ஓட்டு சேகரித்தார்.உழவர்கரை தொகுதியில் பா.ஜ., பொருளாளர் பிரிவு மாநில தலைவி பிரபாதேவி வீரராகு தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள், வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு ஆதரவாக உழவர்கரை தொகுதியில் நேற்று இறுதி கட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.உழவர்கரை தொகுதி ஜெ.ஜெ.நகர், முத்துப்பிள்ளைபாளையம், அரும்பார்த்தபுரம் உட்பட பல பகுதிகளில் அவர், வீடு, வீடாக சென்று 'தாமரை' சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.ஏழை, எளிய மக்களுக்கு பிரபாதேவி வீரராகு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அந்தந்த பகுதி மக்கள், பெண்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை