உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோகிலாம்பிகை அம்மனுக்கு வெள்ளி கவசம் வழங்கல்

கோகிலாம்பிகை அம்மனுக்கு வெள்ளி கவசம் வழங்கல்

வில்லியனுார், :வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் கோகிலாம்பிகை அம்மனுக்கு வேளாண் அமைச்சர் வெள்ளி கவசம் வழங்கினார்.வில்லியனுாரில் பழமைவாய்ந்த கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள திருக்காமீஸ்வரருக்கு ஏற்கனவே வெள்ளி கவசம் உள்ளது. கோகிலாம்பிகை அம்மனுக்கு வெள்ளி கவசம் இல்லாததால், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ரூ. 5 லட்சம் செலவில் கோகிலாம்பிகை அம்மனுக்கு வெள்ளியால் முழு உருவ கவசம் தயார் செய்து நேற்று கோவில் சிறப்பு அதிகாரியிடம் வழங்கினார்.அதனை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ