உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் தொழிற்சாலை ஊழியர் திடீர் மாயம்

தனியார் தொழிற்சாலை ஊழியர் திடீர் மாயம்

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் இருந்து மாயமான தனியார் தொழிற்சாலை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லியனுார், எஸ்.எம்.வி.புரம், மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 42; தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு 9 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த 29ம் தேதி மாலை வேலைக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். மாயமனவர் குறித்து தகவல் தெரிந்தால் கோரிமேடு போலீசுக்கு தெரிவிக்க போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !