உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: சிவா

மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: சிவா

புதுச்சேரி, : மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தி.மு.க., போராட்டம் நடத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கரை அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், துாண்டில் முள் வளைவு அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் கிடப்பில் உள்ளது.மீனவ கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது சமீப காலமாக அதிகரித்து வருவது மீனவர்கள் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது. இது குறித்து விரிவான ஆய்வு நடத்தி கடல் அரிப்பினை தடுக்க வேண்டும்.தடைக்காலத்தில் நிவாரண உதவித் தொகை தாமதமாக வழங்குவது அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது. மீனவர்களுக்கு காலத்தோடு உதவித் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ. 8 ஆயிரத்து 500 வழங்குவதுபோல் புதுச்சேரி அரசும் வழங்கவேண்டும்.புதுச்சேரி அரசு மீனவர்களுக்கு புதியதாக எதையும் செய்ய தேவையில்லை. அவர்களுக்கு இந்த அரசு சொன்னதை செய்தால் போதும். மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நடப்பாண்டில் நிறைவேற்றாவிட்டால் புதுச்சேரி மீனவர்களை ஒன்று திரட்டி தி.மு.க., மீனவர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி