மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
20 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
20 hour(s) ago
வில்லியனுார்: ஊசுடு மற்றும் அரியாங்குப்பம் தொகுதி ஏழை எளிய மக்களுக்கு பியூச்சர் இந்தியா அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முருங்கப்பாக்கம் கோவில் திடலில் நடந்த விழாவிற்கு பியூச்சர் இந்தியா அறக்கட்டளை தலைவர் ராஜமனோகரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் பங்கேற்று ஊசுடு மற்றும் அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஏழை எளியோர்களுக்கு ரூ.75 லட்சம் திட்ட மதிப்பில் சுயதொழில் செய்வதற்கு நான்கு சக்கர தள்ளுவண்டி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நன்கொடைகள், புடவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பியூச்சர் இந்தியா அறக்கட்டளை சொத்து பாதுகாப்பு குழு தலைவர் ஆசிரியர் குப்பன், தொழிலதிபர் கிளாரன்ஸ், அறக்கட்டளை செயல் தலைவர் சுபலட்சுமி, அன்பரசன், வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்
20 hour(s) ago
20 hour(s) ago