உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாளை முதல் பி.ஆர்.டி.சி., முன்பதிவு

நாளை முதல் பி.ஆர்.டி.சி., முன்பதிவு

புதுச்சேரி: ஏ.எப்.டி., புதுபஸ்டாண்டில் நாளை முதல் பி.ஆர்.டி.சி., பஸ்களுக்கான முன் பதிவு துவங்குகிறது.புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 31 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதையடுத்து, கடந்த 16ம் தேதி முதல் ஏ.எப்.டி.,திடலுக்கு புது பஸ்டாண்ட் தற்காலிகமாக மாற்றப்பட்டது. அனைத்து பஸ்களும் ஏ.எப்.டி., திடலில் இருந்து இயங்கப்பட்டு வருகிறது.பயணிகள் நலனுக்காக பி.ஆர்.டி.சி., பயணச்சீட்டு முன்பதிவு மையம் ஏ.எப்.டி., புதிய பஸ்டாண்டில் நிலையத்தில் உள்ள ஹைமாஸ் விளக்கு மற்றும் பயணிகள் நிழல் பந்தல் அருகே அமைக்கப்பட்டுள்ளது.இந்த பி.ஆர்.டி.சி., பயணச்சீட்டு முன்பதிவு மையத்தில் நாளை 8ம் தேதி முதல் முன் பதிவு துவங்குகிறது. காலை 9:00 மணி முதல் முன் பதிவு செய்யலாம். இதுமட்டுமின்றி, BUS INDIA APP என்ற செயலி வழியாக பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என, பி.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை