உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கேபிள் புதைக்க மக்கள் எதிர்ப்பு

கேபிள் புதைக்க மக்கள் எதிர்ப்பு

புதுச்சேரி, : சின்ன காலாப்பட்டு, ஆலமர வீதி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதி வழியாக கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். மேலும் தனியார் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலுக்கு மின்சார கேபிள் செல்வதற்கு, சாலையோர பகுதியில் மின்துறை ஊழியர்கள் மின் கேபிள் புதைக்க நேற்று பள்ளம் தோண்டினர். மின்சார கேபிளை புதைக்க கூடாது என, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து பணியை நிறுத்தினர். தகவலறிந்த காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார், அரசு அனுமதியுடன் மின்சார கேபிள் புதைக்க பள்ளம் தோண்டப்படுகிறது என பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், மீண்டும் பள்ளம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி