உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி கவர்னர் இன்று பதவியேற்பு

புதுச்சேரி கவர்னர் இன்று பதவியேற்பு

புதுச்சேரி : புதுச்சேரியின் புதிய கவர்னர் கைலாஷ்நாதன் இன்று பதவியேற்கிறார்.புதுச்சேரியின் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, புதுச்சேரி கவர்னராக, கைலாஷ்நாதன், கடந்த 27ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர், நேற்று மதியம் 12:45 மணிக்கு புதுச்சேரி வந்தார். அவரை முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.புதிய கவர்னர் பதவி ஏற்பு விழா இன்று 7ம் தேதி காலை 11:15 மணிக்கு ராஜ்நிவாசில் நடக்கிறது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், புதிய கவர்னர் கைலாஷ் நாதனுக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.பதவி ஏற்பு விழாவையொட்டி ராஜ்நிவாசை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்