மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
10 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
10 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
10 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
10 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசியல்வாதிகள் முதல் அடிமட்ட அரசு ஊழியர்கள் வரை, அனைவரும் லஞ்சம் வாங்குவதாக, நேரு எம்.எல்.ஏ., குற்றம் சாட்டி உள்ளார்.லஞ்ச ,ஊழலை தடுக்க வலியுறுத்தி நேரு எம்.எல்.ஏ., பொதுநல அமைப்புகளுடன், கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணனை சந்தித்தார். அப்போது அவரிடம், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்த நேரு, 'இங்கு யாரும் லஞ்சம் வாங்கவில்லை என்று உங்களால் கூற முடியுமா..' என கேள்வி எழுப்பினார். அதற்கு சப் கலெக்டர் 'எல்லாரும் லஞ்சம் வாங்கவே செய்கின்றனர்' என்று பதில் அளித்தார். மேலும் அவர் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது, குறித்து யார் வேண்டுமானாலும், புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.இது குறித்து நேரு எம்.எல்.ஏ., கூறியதாவது:புதுச்சேரியில் லஞ்சம் வாங்குபவர்களுக்கு தண்டனை கிடையாது. ஆனால் அதை எடுத்து சொல்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. அரசியல்வாதிகள் முதல் அடி மட்ட அரசு ஊழியர் வரை லஞ்சம் வாங்குகின்றனர்.இதில், 10 சதவீதத்தினர் மட்டும், விதி விலக்காக இருக்கலாம். புதுச்சேரி அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதை தடுக்க பொது நல அமைப்புகள் போராடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த அமைப்புகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. புதுச்சேரியில் உள்ள ஒரு அமைச்சரையாவது அல்லது அதிகாரியையாவது, எங்கள் துறையில் நிர்வாகத்தில், லஞ்சம் இல்லை என்று சொல்ல சொல்லுங்கள். அனைத்த துறைகளில் ஊழல் மலிந்துள்ளது. நாங்கள் லஞ்சம் வாங்கவில்லை என்று யாரையாவது சொல்ல சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago