உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குயிலாப்பாளையம் மேல்நிலைப் பள்ளி 27 ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை

குயிலாப்பாளையம் மேல்நிலைப் பள்ளி 27 ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை

வானுார்: குயிலாப்பாளையம் மேல் நிலைப்பள்ளி தொடர்ந்து 27 ஆண்டுகளாக பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது.வானுார் அருகே குயிலாப்பாளையம் தனியார் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதிய 332 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 216 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். 100 சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்துள்ளது.பிளஸ் 2 வில், மாணவிகள் ஈஸ்வரி 578, சொர்ணமுகி 576, பிரபாவதி 574 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.10ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் திவானி 492, தேவதர்ஷினி 491, தர்ஷினி 489 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 13 பேர் 400க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.அவர்களை பள்ளி தாளாளர் குணசீலன், தலைமையாசிரியர் பிரகாஷ் ஆகியோர் பாராட்டி, பரிசு வழங்கினர். ஆசிரியர்கள் சாய்பூர்ணிமா, சுல்தானா, பாரதி, வீரராகு, ரமேஷ் உடனிருந்தனர்.பள்ளி தாளாளர் குணசீலன் கூறுகையில், 'எங்கள் பள்ளி கடந்த 27 ஆண்டுகளாக பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்து வருகிறது. இந்தாண்டும், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றிக்கு அயராது உழைத்த பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்