மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
புதுச்சேரி, : பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி மற்றும் சியோல் வினாடி - வினா நிறுவனம் சார்பில், 11வது ஆண்டு வினாடி வினா போட்டி நடந்தது.பெத்திசெமினார் பள்ளி அரங்கில் நடந்த போட்டியில், 18 பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவர்கள் பங்கேற்றனர். நடுவராக சியோல் அமைப்பின் நிறுவனர் முத்துக்குமரன், பெத்தி செமினார் பள்ளி முன்னாள் மாணவர் டாக்டர் சந்தீப் பங்கேற்றனர்.போட்டிகள் வகுப்புகள் அடிப்படையில் 4 நிலைகளில் நடந்தது. அறிவியல் வினாடி வினா போட்டியில் அமலோற்பவம் லுார்து அகாடமி பள்ளி முதல் பரிசு, அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி 2வது இடம், குளுனி பள்ளி 3ம் இடம் பிடித்தது. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில், பேட்ரிக் பள்ளி முதல் பரிசு பெற்றது. குளுனி பள்ளி 2வது இடம், சாக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளி 3ம் பரிசு பெற்றது. 6, 7 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில், பேட்ரிக் பள்ளி முதல் பரிசு, பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி 2வது பரிசு, ஸ்டான்ஸ்போர்ட் பள்ளி 3வது பரிசு பெற்றனர். 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில், ப்ரைம் ரோஸ் பள்ளி முதலிடம், பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி 2வது இடம், குளுனி சி.பி.எஸ்.இ. பள்ளி மூன்றாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெத்தி செமினார் பள்ளி முதல்வர் தேவதாஸ் சுழற்கோப்பை வழங்கினார்.போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வேதியியல் துறை தலைவர் பீட்டர் ஜார்ஜ், ஜான்பிரிட்டோர் செய்திருந்தனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago