உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ராஜசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பாகூர், : பிள்ளையார்குப்பத்தில் ராஜசக்தி விநாயகர் கோவில் மகா பிரதிஷ்டபந்தன கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பிள்ளையார்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள வேம்பு மற்றும் அரச மரத்தடியில், அப்பகுதி மக்கள் விநாயகர் மற்றும் நாக தேவர்களின் சிலைகளை வைத்து பல ஆண்டுகளாக வழிப்பட்டு வந்தனர். அங்கு, புதியதாக கோவில் அமைக்கப்பட்டு ராஜசக்தி விநாயகர் மற்றும் நாகதேவர்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்து, மகா பிரதிஷ்டை கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 6.30 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் காலயாக பூஜை, யாக வேள்விகள் நடந்தது. 9.30 மணிக்கு யாத்ரா தானம், கலச புறப்பாடு நடைபெற்றது.அதனை தொடர்ந்து, 9.45 மணிக்கு ராஜசக்தி விநாயகர் மகா பிரதிஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை