மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
20 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
20 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
20 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
20 hour(s) ago
வில்லியனுார்: சேதராப்பட்டு முத்தமிழ் நகரை சேர்ந்தவர். திருநாவுக்கரசு, மகன் சூர்யா,22; தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இவர் நேற்று பகல் 12:00 மணியளவில் சேதராப்பட்டு ஏரிக்கரை பகுதியில் உள்ள தரை கிணற்று அருகே தனது நண்பர்களுடன் நடந்து சென்றபோது திடீரென சூரியா கால் இடறி கிணற்றில் தவறி விழுந்தார். அப்போது உடன் சென்ற நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால் கூச்சலிட்டனர். அதே பகுதியில் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது சூர்யா மூழ்கிவிட்டார். அதனை தொடர்ந்து சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றுக்குள் இறங்கி சூரியாவை தேடினர்.கிணறு சேறும் சகதியமாக இருந்ததால் உடலை கண்டுப்பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாலை 3:00 மணியளவில் சூரியா இறந்த நிலையில் உடலை மீட்டனர். புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago