உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் பாதை ஆக்கிரமிப்பு பூக்கடைகள் அகற்றம்

கோவில் பாதை ஆக்கிரமிப்பு பூக்கடைகள் அகற்றம்

புதுச்சேரி, : மணக்குள விநாயகர் கோவிலுக்கு செல்லும் பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த பூக்கடைகளை போலீசார் அகற்றினர்.புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தினசரி நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு நேரு வீதி மற்றும் லா தெ லொரிஸ்தோன் வீதி வழியாக செல்ல முடியும்.நேரு வீதி வழியாக செல்லும் பாதையில், கோவிலுக்கு முன்னதாக பேரிகார்டு அமைத்து பாதையின் இருக்கமும், பூக்கடைகள் அமைத்திருந்தனர். இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இது தொடர்பாக பெரியக்கடை போலீசுக்கு புகார் சென்றது.போலீசார், கோவில் வாசலில் பக்தர்கள் செல்வதற்கு இடையூறாக இருந்த பூக்கடைகளை அப்புறப்படுத்தியதுடன், பக்தர்களுக்கு இடையூறாக வழியை மறித்து கடைகள் அமைக்க கூடாது என, எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ