| ADDED : ஜூலை 02, 2024 05:11 AM
புதுச்சேரி: பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து சென்டாக் கன்வீனர் நீக்கப்பட்டுள்ளார்.கடந்த காலங்களில் சென்டாக் மாணவர் சேர்க்கை அமைப்பிற்கு, கல்லுாரி இயக்குனர், முதல்வர் என்ற அளவில் மூத்த பேராசிரியர்கள் கன்வீனராக நியமிக்கப்பட்டு வந்தனர். அதன்படி, இந்தாண்டு, வில்லியனுார் கஸ்துாரிபா அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் ெஹரில் ஆன் ஷிவன் சென்டாக் கன்வீனராக நியமிக்கப்பட்டு இருந்தார்.ஆனால், மூத்த பேராசிரியரான அவரை திடீரென நீக்கிவிட்டு, ஜூனியரான ராஜிவ் காந்தி அரசு கலை கல்லுாரி உதவி பேராசிரியர் பாலாஜி நியமிக்கப்பட்டார். இதற்கு, பேராசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. கன்வீனர் நியமனத்திற்கு எதிராக ஓரணியில் திரண்டு, புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து மாணவர், பெற்றோர் அமைப்புகளும் கவர்னரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதை தொடர்ந்து, சென்டாக் கன்வீனராக இருந்த பாலாஜி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். வில்லியனுார் கஸ்துாரிபா அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் ெஹரில் ஆன் ஷிவன் மீண்டும் சென்டாக் கன்வீனராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை கவர்னரின் உத்தரவின்படி உயர் கல்வி துறை சார்பு செயலர் சவுமியா பிறப்பித்துள்ளார்.