உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுவன் தொண்டையில் சிக்கிய டூத் பிரஷ் அகற்றம்

சிறுவன் தொண்டையில் சிக்கிய டூத் பிரஷ் அகற்றம்

புதுச்சேரி : தொண்டையில் சிக்கிய 'டூத் பிரஷை' புதுச்சேரி மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி, சிறுவன் உயிரை காப்பாற்றினர்.விழுப்புரம் மாவட்டம், கிளியனுாரை சேர்ந்த, 14வயது சிறுவன் நேற்று காலை பல் துலக்கியபோது, அவரது சகோதரர், விளையாட்டாக சிறுவனின் பின் தலையில் தட்டினார். அதில், பிரஷின் முன் பகுதி சிறுவனின் தொண்டையில் சிக்கியதால், சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.உடன் அவரை, புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு பல் மருத்துவக் கல்லுாரி முதல்வர் கென்னடி பாபு முன்னிலையில், வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் சங்கர் தலைமையிலான மருத்துவ குழுவினர்அறுவை சிகிச்சை மேற்கொண்டு, சிறுவனின் தொண்டையில் சிக்கிய டூத் பிரஷை அகற்றினர். தற்போது சிறுவன் நலமுடன் உள்ளார்.கல்லுாரி முதல்வர் கென்னடி பாபு கூறுகையில், 'டூத் பிரஷ் வாயில் வைத்த படி, வாகனம் ஓட்டுதல், மொபைல் போன் பேசிக்கொண்டே பல் துலக்குதல் மற்றும் பல் துலக்கும் போது விளையாடுவதை தவிர்க்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை