உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆர்.கே.நகர் பகுதியில் சாலை மறியல்

ஆர்.கே.நகர் பகுதியில் சாலை மறியல்

புதுச்சேரி, : அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் பகுதியில் தொடர் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி சாலை மறியலில் ஈடுபட்டனர்.அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று காலை முதல் அப்பகுதியில் மின்சாரம் அடிக்கடி தடைபட்டது. வெயிலின் தாக்கம் பகல் நேரங்களில் அதிகரித்து காணப்பட்டதால், தொடர் மின்தடையால், அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து பலமுறை மின்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.தொடர் மின்தடையை கண்டித்து, பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நேற்று மாலை திடீரென அரியாங்குப்பம் சாலையில் மெழுகுவர்த்தி ஏற்றி மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த மின்துறை அதிகாரிகள் மற்றும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், டிரான்ஸ்பார்மர் பழுது சரி செய்யப்பட்டு, அப்பகுதிக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது.இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை