புதுச்சேரி, : பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து தேசிய தலைவர் நட்டா,முதல்வர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் நடத்திய ரோடு ேஷாவில் வழிநெடுக்கிலும் பொதுமக்கள்,தொண்டர்கள் பூக்களை துாவி உற்சாக பங்கேற்றனர்.புதுச்சேரி லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நமச்சிவாயம் நிறுத்தப்பட்டுள்ளார்.அவரை ஆதரித்து பா.ஜ.,சார்பில் நேற்று ரோடு ேஷா (வாகன பேரணி) நடந்தது.இந்த பேரணியில், பா.ஜ.,தேசிய தலைவர் நட்டா கலந்து கொண்டு தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.நேற்று இரவு 7 மணியளவில் அண்ணா சதுக்கத்தில் துவங்கிய பா.ஜ., ரோடு ேஷா-வாகன பேரணியில் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பிரசார வாகனத்தில் நட்டா ஏறினார்.அவருடன் முதல்வர் ரங்கசாமி,பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம்,மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா,கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ,ஓம்சக்திசேகர்,பா.ம.க.,மாநில தலைவர் கணபதி உடனிருந்தனர்.பிரசார வாகனம் முன், நாதஸ்வரம்,செண்டைமேளம் முழங்க புறப்பட்ட பேரணியில் முன் பா.ஜ.,நிர்வாகிகள்,தொண்டர்கள்,ஏராளமானவர்கள் கட்சி கொடிகளை பிடித்தவாறு முன் அணிவகுக்க,அவர்களுக்கு பின்னால் நட்டா,வேட்பாளர் சென்ற பிரசார வாகனம் வந்தது.அப்போது வழிநெடுக்கிலும் பூக்களை துாவி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.மாடி வீடுகளில் இருந்து,வர்த்தக கட்டடங்களில் இருந்து பொதுமக்களை பூக்களை துாவினர்.அண்ணாசதுக்கத்தில் இருந்து புறப்பட்ட வாகன பேரணி அண்ணாசாலை,ராஜா தியேட்டர்,பட்டாணிக்கடை சந்திப்பு வழியாக,இறுதியில் அஜந்தா சிக்னல் அருகே இரவு 8 மணியளவில் நிறைவடைந்தது.இந்த பேரணியில் முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன்,அமைச்சர் சாய்சரவணன்குமார்,பா.ஜ.,எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம்,அசோக்பாபு,ராமலிங்கம்,வெங்கடேசன்,ஜான்குமார்,ரிச்சர்டு,சிவசங்கர் கலந்து கொண்டனர்.