உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டில் இயற்பியலின் பங்கு மாணவர்கள் செயல் விளக்கம்

விளையாட்டில் இயற்பியலின் பங்கு மாணவர்கள் செயல் விளக்கம்

புதுச்சேரி : முத்திரையர்பாளையம்,இளங்கோ அடிகள் அரசு பள்ளியில் புத்தகப் பை இல்லா தினத்தையொட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற, இயற்பியல் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சாதனை மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.இதில்கிரிக்கெட், கால்பந்து, பளு துாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுபோட்டிகள் குறித்து விளக்கப்பட்டன. பிளஸ் 2 மாணவர்கள் காவ்யா, கிேஷார்,வாகீசன், மாதவன், பரமேஸ்வரன், அபர்ணா, ராஜாராம், சத்ய பிரியா, முனுஷந்தன், ஆகாஷ், சுஸ்மிதா ஆகியோர் பயிற்சி செய்து காண்பித்தனர்.ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள், இயற்பியல் ஆசிரியர் ஸ்ரீராம், உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல், கலியுவராஜா மற்றும் நுண்கலை ஆசிரியர் இளமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை