| ADDED : ஜூன் 20, 2024 03:49 AM
புதுச்சேரி : பரோலில் வந்து தலைமறைவான ரவுடி கருணா மற்றும் அவருக்கு உதவிய 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.காலாப்பட்டு சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தமுதலியார்பேட்டை அனிதா நகர் ரவுடி கருணாகடந்த 11ம் தேதிபரோலில் வந்து தலைமறைவானார். கோவையில் பதுங்கியிருந்த அவரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.இவர்தலைமறைவாக உதவிய அவரது சகோதரர் முதலியார்பேட்டை பாஸ் (எ) பாஸ்கர்,53; பாஸ்கர் மகன் ரவிகார்த்திக்,24; அனிதா நகர், வாய்க்கால் வீதி கருப்பு சரவணன்,32; வீராம்பட்டினம் பவாணி நகர், நேரு வீதி அருள் (எ) கோதண்டபாணி,38; காரைக்கால் கோவில்பத்து சிவநேசன் (எ) சிவா, 33; கிருமாம்பாக்கம், இந்திரா நகர் புகழ் (எ) புகழேந்தி, 37; ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர்.அதனை தொடர்ந்து கருணா உள்ளிட்ட 7 பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.