மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
புதுச்சேரி: திருபுவனை விவசாயிகள் சேவை கூட்டுறவு வங்கியில்போலி ஆவணங்கள் சமர்பித்து ரூ.35 லட்சம் கடன் பெற்று மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி திருபுவனையில் இயங்கி வரும் விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கத்தின் வங்கி, மதகடிப்பட்டில் இயங்கி வருகிறது. இந்த சங்கம் மற்றும் வங்கி மூலம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் நகைக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.இச்சங்கத்தின் உறுப்பினரான கலிதீர்த்தாள்குப்பம் முருகையன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கியின் மூலம் வழங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்து தகவல் பெற்றார். அதில் விவசாயிகள் அல்லாத 50க்கும் மேற்பட்டோர் ரூ.35 லட்சம் கடன் பெற்று மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. மனுவுடன் சமர்பித்த வருவாய் துறை ஆவணங்களை வில்லியனுார் தாசில்தார் அலுவலகத்தில் சரிபார்த்ததில் அவை போலி என்பது தெரிய வந்தது. இது குறித்து முருகையன் கொடுத்த புகாரின்பேரில் கலிதீர்த்தாள்குப்பம் ரமேஷ் மற்றும் வங்கி மேலாளர் நல்லுார் ஜெயக்குமார் ஆகியோர் மீது திருபுவனை போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago