உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.70 லட்சம் காப்பீடு தொகை வழங்கல்

விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.70 லட்சம் காப்பீடு தொகை வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரியில் பணியின்போது விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ. 70 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்பட்டது. முதலியார்பேட்டை சுந்தராஜ வீதியைச் சேர்ந்தவர் அசோக்ராஜ், 43; ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிரைம் பிரிவு கான்ஸ்டபிள். இவரது மனைவி லதா. 15 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த ஆண்டு நவ. 28ம் தேதி நுாறடிச் சாலையில் பைக்கில் சென்ற அசோக்ராஜ், அக்கார்டு ஓட்டல் பிரிலெப்ட் சாலை பிரிக்க அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பில் மோதி உயிரிழந்தார்.புதுச்சேரி போலீஸ்காரர்கள் சம்பளம், ஸ்டேட் வங்கி மூலம் வழங்கப்படுகிறது. போலீஸ் சம்பளத் தொகுப்பின் கீழ் வழங்கப்படும், தனிநபர் விபத்துக் காப்பீடு பலன் ரூ. 70 லட்சம் வழங்க புதுச்சேரி போலீசுக்கும், ஸ்டேட் வங்கிக்கும் இடையே கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனை தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் அசோக்ராஜ் குடும்பத்திற்கு, இழப்பீடு தொகையாக ரூ. 70 லட்சம், அவரது மனைவி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அசோக்ராஜ் குடும்பத்தினர், டி.ஜி.பி. ஸ்ரீநிவாசை சந்தித்து நன்றி கூறினர். சீனியர் எஸ்.பி. நாராசைதன்யா உடனிருந்தார்.இந்த காப்பீடு பாதுகாப்பு மூலம் இனி வரும் காலங்களில் பணியில் இருக்கும் போலீசார் ஏதேனும் விபத்தில் இறந்தால் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் காப்பீடு தொகை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை