உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

புதுச்சேரி: வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழாவை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.புதுச்சேரி வனத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் வாரத்தில் மரக்கன்று நடும் விழா கொண்டாடப்படும். அதன்படி, 10 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். வனத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அரசு தலைமை செயலர் சரத்சவுக்கான், வனத்துறை செயலர் ஜவகர், வன பாதுகாவலர் அருள்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 10,000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க ஒவ்வொரு தொகுதிக்கும் பிரித்து அனுப்பட்டது.வேளாண் துறை, போலீஸ், நீதித்துறை உள்ளிட்ட துறைகள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள், புதுச்சேரியில் 108 கிராமங்களிலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மகளிர் சுய உதவிக்குழு மூலம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ