உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கள்ளச்சாராய வியாபாரி சரண்

கள்ளச்சாராய வியாபாரி சரண்

கச்சிராயபாளையம் : மாதவச்சேரி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்றவர் நேற்று போலீசில் சரணடைந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்து மகன் ராமர்,36; இவர் அதே கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார். கடந்த 18ம் தேதி இவர் விற்ற சாராயத்தை வாங்கி குடித்தவர்களில் 20க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அதனைத் தொடர்ந்து தலைமறைவான ராமரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் அவர் நேற்று காலை கச்சிராயபாளையம் போலீசில் சரணடைந்தார். அவரிடம் செங்கம் டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் கள்ளச்சாராயத்தை சப்ளை செய்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி