உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடைக்கு சீல்; உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடைக்கு சீல்; உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைத்து, வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரிபேக், ஸ்ட்ரா உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் தினமும் ஆய்வு மேற்கொண்டு கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகிறது.ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என, ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக பூக்கடை, இறைச்சி கடைகளில் இவை அதிகம் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் முதற்கட்ட ஆய்வில் பறிமுதல் செய்யப்பட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இரண்டாம் கட்ட ஆய்வின்போதும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டால், அந்த பொருட்கள் ஜப்தி செய்து, கடைகளுக்கு சீல் வைக்கப்படும். அத்துடன் நகராட்சி வணிக உரிமம் ரத்து செய்யப்படும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை உணர்ந்து பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உள்ள துணிப் பைகள், பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை