| ADDED : ஜூலை 20, 2024 04:42 AM
புதுச்சேரி: போதிய வருமானம் இல்லாததால் மனமுடைந்த செக்யூரிட்டி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.முருங்கப்பாக்கம், காமராஜர் நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் குமரன், 57; இவரது மனைவி பிரமிளா. ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 10 ஆண் டுகளாக தனியார் கம்பெனி மூலம் ஆர்.டி.ஓ.,வில் புரோக்கராக பணியாற்றி வந்தார். தனியார் கம்பெனி மூடி விட்டதால், செக்யூரிட்டி வேலைக்கு சென்று வந்தார். சரியான வருமானம் இல்லாததால், குடிப்பழக்கத்திற்கு ஆளானார். அளவுக்கு அதிகமாக குடித்து வந்த குமரனை அவரது குடும்பத்தினர் கண்டித்தனர்.இதில் மனமுடைந்த குமரன் நேற்று முன்தினம் இரவு மாடியில் துாக்குமாட்டி தற்கொலை செய்த கொண்டார். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.