| ADDED : செப் 09, 2026 07:31 PM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் நடந்தது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகம் சார்பில், ஜி.எஸ்.டி., –2.0; இந்தியாவில் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. பொருளாதாரத் துறைத் தலைவர் சங்கரன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் நோக்கவுரையாற்றினார். பேராசிரியர் நடராஜன், இந்தியப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் ஜி.எஸ்.டி, ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் விளக்கினார். 14-வது நிதிக் குழுவின் தலைவர் கோவிந்த ராவ் பேசுகையில், ‘இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற ஜி.எஸ்.டி., வரியில் மேலும் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் அவசியம் என, குறிப்பிட்டார். பிரேம்குமார் நன்றி கூறினார்.