உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் பேராசிரியர்களுக்கான கருத்தரங்கு

ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் பேராசிரியர்களுக்கான கருத்தரங்கு

புதுச்சேரி: ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடந்தது.நிகழ்ச்சியில், சென்னை செயின்ட் பீட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ைஹயர் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச் துணை வேந்தர் தனஞ்ஜெயன், மாணவர்களை திறம்பட ஈடுப்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை படுத்துவது பற்றியும், ஆசிரியர்கள் வகுப்பறையில் கற்றல் நுட்பங்கள் மற்றம் படைப்பாற்றலை வளர்ப்பது குறித்தும் சிறப்புரை நிகழ்த்தினார்.கற்பித்தல் முறைகளை, மேம்படுத்தவும், இன்றைய மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பாக கருத்தரங்கில் பேசப்பட்டது.கல்லுாரி தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் மகேந்திரன், துணை முதல்வர் மெடில்டா, பேராசிரியர்கள் வேல்முருகன், வித்யா உட்பட அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி