உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு சென்டாக் வாய்ப்பு

நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு சென்டாக் வாய்ப்பு

நர்சிங் நுழைவு தேர்வில் வெற்றிப் பெற்று இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு சென்டாக் கடைசி வாய்ப்பு அளித்துள்ளது.புதுச்சேரி அரசு மற்றும் தனியார் சுய நிதி கல்லுாரி களில் உள்ள பி.எஸ்சி., நர்சிங் கல்லுாரி சீட்டுகளுக்காக நர்சிங் நுழைவு தேர்வு அண்மையில் நடத்தி, சுகாதாரத் துறை முடிவுகளை வெளியிட்டது.இந்த நுழைவு தேர்வு எழுதி வெற்றிப் பெற்று, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், www.centacpuducherry.inஎன்ற இணையதளத்தில் யு.ஜி., நான் - நீட் டேஸ்போர்டு வாயிலாக வரும் 31ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி நர்சிங் கல்லுாரியில் உள்ள சுய நிதி இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள மதர்தெரசா முதுநிலை பட்ட மேற்படிப்பு ஆராாய்ச்சி சுய நிதி, என்.ஆர்.ஐ., சீட்கள் நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.எனவே, இந்த பிரிவுகளில் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், சென்டாக் இணையதளத்தில், யு.ஜி., நான் - நீட் பிரிவினை தேர்வு செய்து வரும் 31ம் தேதிக்குள் விண்ணணப்பிக்கலாம்.இந்த வாய்ப்பினை, பயன்படுத்தி சுய நிதி என்.ஆர்.ஐ., இடங்களுக்கு நீட் மதிப்பெண்ணை 31ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அப்டேட் செய்யலாம்.இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள போதி லும், நர்சிங் படிப்பிற்கு மட்டுமே இந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மற்ற நீட் அல்லாத படிப்புகளுக்கு இந்த புதிய விண்ணப்பத்தின்படி சீட் ஒதுக்கப்படாது என, சென்டாக் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை