உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எஸ்.இ.டி.சி., பணிமனையில் கவன ஈர்ப்பு போராட்டம்

எஸ்.இ.டி.சி., பணிமனையில் கவன ஈர்ப்பு போராட்டம்

புதுச்சேரி: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு விழுப்புரம் மண்டலம் புதுச்சேரி கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிமனையில் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று நடந்தது.எஸ்.இ.டி.சி., சங்க தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் பாலசுப்மணியன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் தமிழ்வாணன், துணை செயலாளர் ராமதாஸ், விழுப்புரம் மண்டல பொருளாளர் ராமலிங்கம், செயலாளர் ராமமூர்த்தி, சங்க நிர்வாகிகள் புரு ேஷாத்தமன், சகாதேவன் கண்டன உரையாற்றினர்.போராட்டத்தின் போது 103 மாத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். 2022 டிசம்பர் முதல் பணப்பலன்களை வழங்க வேண்டும். ஒப்பந்த முறை பணி நியமனத்தை கைவிட வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். இதர துறைகளை போல மருத்துவ காப்பீட்டினை செயல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ