உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி நுகர்வோர் கோர்ட்டில் 32 வழக்குகளில் 9 வழக்குகளுக்கு தீர்வு

புதுச்சேரி நுகர்வோர் கோர்ட்டில் 32 வழக்குகளில் 9 வழக்குகளுக்கு தீர்வு

புதுச்சேரி : புதுச்சேரி நுகர்வோர் நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத் 32 வழக்கில், 9 வழக்குகள் உடன்படிக்கை ஏற்பட்டு தீர்வு காணப்பட்டது. புதுச்சேரி நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தின் சார்பில் நடந்த லோக் அதாலத்தில், மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய அமர்வு பங்கேற்றனர். மக்கள் நீதிமன்றத்தில், மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் இருந்து 32 வழக்குகள் சமாதானத்திற்கானது என கண்டறிப்பட்டு, அந்த வழக்குகள் பேச்சு வார்த்தைக்கு உட்படுத்தப்பட்டு, அதில், 9 வழக்குகளில் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட வழக்குகளில், குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் முத்தம்மா பயனாளிகளுக்கு நஷ்டஈடு நிதி வழங்கினார். நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி