மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
புதுச்சேரி: கார் வெடித்து சிதறுவது போல அதிக சத்தத்துடன் நள்ளிரவு நேரத்தில் படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரியில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிந்து வரும் கோட் திரைப்படம் படபிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் சில காட்சிகள், ஏ.எப்.டி., பஞ்சாலை, கடற்கரை சாலை, பழைய துறைமுகம் உள்ளிட்ட பல இடங்களில் படபிடிப்பு நடந்தது.நேற்று மீண்டும் படபிடிப்பு துவங்கியது, படத்தின் சண்டை காட்சிகள் பழைய துறைமுக பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதில், ஒரு கார், மற்றோரு காரின் மீது விழுவது போல படமாக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட சத்தத்தில், அப்பகுதி மக்கள் திடுக்கிட்டனர்.அதே போல, இ.சி.ஆர்., சாலை சிவாஜி சிலை அருகே நள்ளிரவில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. சாலையில் கார் வெடித்து தீப்பற்றி எரிவது போல காட்சிகள் எடுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் சினிமா படம் எடுக்கப்பட்ட சம்பவம் பற்றி தெரியவந்தது.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago