| ADDED : ஆக 11, 2024 05:34 AM
நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்கள் திறப்பு விழாவுக்கு காத்திருக்கின்றன.நகரத்தின் பல இடங்களில் அமைந்துள்ள சிக்னல்கள் முழுதுமாக செயல்படவில்லை. சிக்னல் கம்பங்கள் சாய்ந்து, அதில் உள்ள விளக்குகள் எரியாமல் கிடக்கிறது.இந்திரா சிக்னல், நெல்லித்தோப்பு, ஒதியஞ் சாலை சிக்னல்களில் விளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்கின்றன.இதையடுத்து, நகர பகுதியில் ரூ.3 கோடி செலவில், பழைய சிக்னல்களை புதிதாக மாற்றியும், 6 இடங்களில் புதியதாகவும் டிராபிக் சிக்னல்கள் அமைக்கப்பட்டன.சிக்னல்கள் அமைக்கப்பட்டு பல வாரங்கள் கடந்தும், இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'புதிய டி.ஜி.பி., பொறுப்பேற்ற பின், அவர் மூலமாக டிராபிக் சிக்னல்களை திறந்து வைக்க திட்டமிட்டுள்ளோம்' என தெரிவித்தனர்.
விடுபட்ட 2 சிக்னல்கள்
24 மணி நேரமும் போக்குவரத்து அதிகமாக உள்ள இந்திரா, ராஜிவ் சதுக்கங்களில் உள்ள சிக்னல்கள் புதிதாக மாற்றப்படவில்லை. இந்த இரண்டு சிக்னல்கள் உட்பட 16 சிக்னல்கள் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.